Tuesday, 26 April 2022

நம்மால்எப்படிமற்றும்எப்போதுசாதிக்க_முடியும்.

 நம்மால்எப்படிமற்றும்எப்போதுசாதிக்க_முடியும்...?


Photo From Google Images

☘️ நம் இலக்கை அடைவதற்கும் அடையாமல் போவதற்கும் நூல் அளவு தான் வித்தியாசம். 


☘️ நம்மால் எல்லாம் சாதிக்க முடியாது என்கிற உண்மையைப் புரிந்து கொண்டால், அனைத்தின் மீதும் ஆசைப்படும் பேராசையில் இருந்து வெளியே வந்துவிடலாம். 


☘️ என்னால் என் இலக்கை சாதிக்க முடியும் என்கிற உண்மையை உணர்ந்து கொண்டால் நிச்சயமாக உங்களால் உங்கள் இலக்கை அடைய முடியும். 


☘️ நமக்கு எல்லாமே வேண்டும் என்று பேராசைப் படுகிறோம். நாம் இப்படி இருந்தால் நாம் அப்படி இருந்தால் என்று நமது கவனத்தை அலைபாய விட்டு விடுகிறோம். 


"கவனம் குவியும் இடத்தில் தான் 

சக்தி பாயும்."


☘️ நமது இலக்கு எது என்று தேர்வு செய்து, அதை நோக்கி நகரும், அது மட்டுமே தன் வாழ்வென வாழும், அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒருவரால் நிச்சயம் சாதிக்க மட்டுமே முடியும்...

No comments:

Post a Comment