Tuesday, 26 April 2022

உறுதி மொழி எடுங்கள் அதன் படி நடந்து காட்டுங்கள்

 ஒரு செயலில் இறங்கியப் பிறகு அதை முடிக்கும் வரை என் கவனத்தை வேறெதிலும் செலுத்த மாட்டேன்



உரிய நேரத்தில் முடிக்க வேண்டிய செயல்களை அந்நேரத்திலேயே முடித்து விடுகிறேன்


செய்யும் செயலில் முழு கவனம் செலுத்தி அதை சிறப்பாக செய்து முடிக்கிறேன்


அன்று முடிக்க வேண்டிய செயல்களை வரிசையாக குறித்து வைத்துக் கொண்டு, அதனை அவ்வாறே முடித்து விடுகிறேன்


கிடைக்கும் நேரங்களை எனக்குப் பயனுள்ள வகையில் இருக்கும்படி செயல்படுத்தி வருகிறேன்


என் செயல்கள் யாவும் மற்றவர்களுக்கு எந்தவித இடையூறுகளும் இல்லாத வகையில் செயல்படுகிறேன்


மேற்கூறிய அனைத்தையும் என் வாழ்நாளில் தொடர்ந்து பின்பற்றி வருவேன் என்று உளமார உறுதியளிக்கிறேன்

No comments:

Post a Comment