பணத்தை ஈர்ப்பது எப்படி?
சுவாரசியமான Topic.
பணம் என்றால் நாம் நினைக்கும்
கரன்சி அல்ல.
பணம் என்பது அளப்பரிய சக்தி,
வாழ்வின் வளங்கள் அனைத்தும்
அளிக்கும் ஜீபூம்பா போல.
பணத்தின் தெய்வீக குறியீடு லக்ஷ்மி. பிரபஞ்ச பேராற்றலின் சக்தியின் அங்கம்.
ஞான மார்க்கத்தில் ஒரு சிந்தனை உண்டு.
எதை நீ தேடிக் கொண்டிருக்கிறாயே அது உன்னையும் தேடி கொண்டிருக்கிறது.
பணமும் அப்படித்தான்.
நாமும் பணமும் சரியாக ஒரே அலைவரிசையில் வர வேண்டும்.
அதற்கு ஒரு தெய்வீக உணர்வு வேண்டும்.
என்ன அது?
நன்றியுணர்வு.
சம்பந்தமில்லாமல் எதையோ சொல்லிக் கொண்டு என்று எண்ணாதீர்கள்.
ஒரு சிறு உதாரணம்:
உங்கள் நண்பர் உங்களுக்கு ஒரு பரிசு அளிக்கிறார். நீங்கள் எதுவும் சொல்லாமல் வாங்கி வைத்து கொள்கிறீர்கள்.
இரண்டாவது முறையும் அவர் பரிசளிக்கிறார். அப்போதும் நீங்கள் ஒன்றும்சொல்லவில்லை.
மூன்றாவது முறை உங்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு வராது.
முதல் முறை அவர் பரிசளிக்கும் போது, நாம் மனம் நெகிழ்ந்து நன்றி உணர்வோடு அவரை மிகவும் பாராட்டி பரிசை வாங்கி இருந்தால், நண்பரும் அகம் மகிழ்ந்து, மேலும் பரிசளிக்க விரும்புவார்.
இதே நன்றி உணர்வை பணத்திடமும் உறவாட வேண்டும்.
பணம் நம்மிடம் வந்தால் சிறு தொகையாக இருந்தாலும் நன்றியுணர்வோடு வரவேற்க வேண்டும்.
என்னை தேடி வந்திருக்கிறாயே மகாலட்சமி என்று ஆத்மார்த்தமாக குதூகலித்து பணத்தை வரவேற்க வேண்டும்.
நம் பெரியவர்களை பார்த்து இருப்பீர்கள். பணம் வந்தால் கண்ணில் ஒற்றி ஆத்மார்த்தமாக வணங்கி, வியாபாரியாக இருந்தால் Cash box ல் வைப்பார்கள். வீடாக இருந்தால் பீரோவில் வைப்பார்கள்.
ஒரு ரூபாய் Coin கீழே விழுந்தால் கூட, எடுத்து கண்ணில் ஒற்றி பைக்குள் போடுவார்கள்.
அதுதான் நன்றியுணர்வு.
என் வாழ்வை வளமாக்க வந்த தாயே, பிரபஞ்ச அளப்பரிய சக்தியே என்று எண்ணவலிவோடு, செல்வத்தை வரவேற்க வேண்டும்.
அதே போல பணத்தை கொடுக்கும் போது, பல மடங்காக திரும்பி வா தாயே என்று நன்றியுணர்வோடு ஆத்மார்த்தமாக எண்ணி தரவேண்டும்.
கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.
எண்ணம் ஆராய்தலும், அலை இயக்கமும் தெரிந்தவர்களுக்கு இதன் சூட்சுமம் புரியும்.
நமது எண்ண அலைகள் பிரபஞ்சமெல்லாம் பரவி, நம் எண்ணம் போல செல்வத்தை ஈர்க்கும் சூழ்நிலைகளை எல்லாம் வல்ல இறை நிலை உருவாக்கும்.
இது அனுபவ உண்மை.
இன்று முதல் மனப்பூர்வமாக செய்து பாருங்கள். மாற்றம் கண்டிப்பாக வரும்.
பணமே வர எனக்கு வாய்ப்பே இல்லை. எங்கே வரவேற்பது? என்று சிலர் சலித்துக் கொள்வார்கள்.
வாழ்வில் பெறும் சிறு தொகையை கூட வாழ்த்தி வரவேற்று பாருங்கள். நிலைமை மாறும்.
அதே போல கடன் வாங்கி இருந்தாலும், இந்த கடன் தொகையை ஏமாற்றாமல், கண்டிப்பாக நல்ல முறையில் திருப்பி கொடுப்பேன் என்று உங்கள் எண்ணங்களை positive ஆக மாற்றுங்கள். நல்லதே நடக்கும்.
எல்லாமே எண்ணங்கள்தான்.
எண்ணத்தை தவிர வேறு ஒன்றுமில்லை,
நம் வாழ்வை செம்மைபடுத்த.
எண்ணம் போல வாழ்வு.
எண்ணம் எழும் இடமோ சிறு புள்ளி.
விரிந்து முடியும் இடமோ அகண்டாகாரம்.
No comments:
Post a Comment