Tuesday, 26 April 2022

தமிழக காவல் துறை தலைவர் திரு. சைலேந்திரபாபு அவர்களின் முகநூல் பதிவு

 தமிழக காவல் துறை தலைவர் திரு. சைலேந்திரபாபு அவர்களின் முகநூல் பதிவு

Photo from Google Site


பெற்றோருக்கான_பதிவு... !!! 


காலையில எட்டு டூ பத்து..

மதியானம் நாலு டூ ஆறு...

எந்த ஊர்ல இருக்குற பஸ்ஸ்டாண்ட்ல வேனும்னாலும் போய் நின்னு பாருங்க...

நீங்களே  அடிக்கிற ... அளவுக்கு மலிந்து கிடக்கிறது இந்தக்காலத்து  பள்ளிக்கூடத்து பிஞ்சுகளின் காதல்..


பெருமைக்குரிய_பெற்றோர்களே ... !!!


ஒரு நிமிடம் ஒதுக்கி இதைப் படியுங்கள்.


தலைமுறை இடைவெளியில் உங்கள் காலத்து நடைமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு, உங்கள் குழந்தைகளை அணுக வேண்டாம்..


காரணம் மிக அவசரகதியான உலகத்தில் உங்கள் பிள்ளைகள் பிணைக்கப்பட்டு இருக்கிறார்கள்..


உங்கள் பொறுமை புத்திசாலித்தனத்தை விட அவர்கள் அதிவேகமும் விவேகமும் ஆனவர்கள்...


நவீன யுகத்தின் வீபரீதங்களின் மொத்த தாக்குதல்களுக்கும்... உங்கள் பிள்ளைகள் ஆளாகி விட்டிருக்கிறார்கள்..


நீங்கள் பதிநாலாம் வயதில், ஊருக்கு ஒதுக்குப்புற தியேட்டரில், அரைகுறையாக பார்த்த பாலியல் படங்களை,

உங்கள் மகனோ  மகளோ

உங்கள் வீட்டுக்குள் அதைவிட துல்லியமாகவும் தெளிவாகவும் வைத்து பார்க்கும் காலம் இது..


அந்தவகையான வெப்சைட்டுகளுக்கு அவர்கள் தேடிப்போவதில்லை....

இன்னபிற தளங்களுக்கு செல்கையில் போர்ன்சைட் விளம்பரங்களை அள்ளித்தெளிக்கிறது இணைய உலகம்...


அதை ஸ்கிப் செய்துவிட்டு போன பிள்ளைகளைவிட அதைப்பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அதற்குள் மூழ்கிப்போன பிஞ்சுகளே அதிகம்...


நீங்கள் கள்ளிச்செடிகளில் பெயர் எழுதிய அதே பள்ளிப் பருவத்தில், இவர்கள் கள்ளிச் செடிகளுக்குள் காமம் எழுதுகிறார்கள்..

ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கும் மாணவிக்கும் குறைந்த பட்சம் ஐந்து காதல் நிறுத்தங்களாவது அல்லது மூன்று காதல் முறிவுகளாவது இருக்கின்றன..


நீங்கள் கூட்டிச் செல்லாத ,ஆள் ஆரவராமில்லா உள்ளூர் சுற்றுலாத் தளங்கள் அத்தனையும் உங்கள் பிள்ளைகளுக்கு தெரிந்திருக்கின்றன.


இதுவரை, நீங்கள் கூட அறிந்திராத ஹோட்டல்கள் அவர்களுக்கு அத்துப்படி...


ஆண்குழந்தைகள் தவிர்த்து பெண் குழந்தைகளும் தற்போது  மதுவின் வாசனை பழகி இருக்கிறார்கள்..


என் பிள்ளையிடமோ என்னிடமோத்தான் ஆன்ராய்டு போன் இல்லையே என நிம்மதி கொள்ளாதீர்கள்..

தோழன் தோழி என்ற வைரஸ்களால் உங்கள் பிள்ளைகளுக்கு பாதிப்பு அதிகம்.


என் கண் முன்னே ஒரு எஸ்.டி.டி பூத்தில் ஒரு எட்டாம் வகுப்பு மாணவி ஐந்து வேறுவேறு நபர்களுக்கு போன் செய்கிறது.. கடைசியாக அப்பாவுக்கு போன்செய்து, இன்னைக்கு ஸ்பெசல்கிளாஸ் வீட்டுக்குவர லேட்டாகும் டாடி என்கிறது....


முன் பொம்மைகளால் நிரம்பிக் கிடந்த குழந்தைகள் உலகம், இப்போது பொய்மைகளால் நிரம்பிக்கிடக்கிறது...


உங்கள் குழந்தைகளின் நண்பர்களை அவ்வப்போது அழைத்துப் பேசி அவர்களின் குணத்தை தெரிந்துகொள்ள முனையுங்கள்.


குறிப்பாக உங்கள் குழந்தைகளுடன் நட்புறவில் இருங்கள்.


முடிந்தால் நல்ல தோழனாகவும் தோழியாகவும் இருங்கள்...

காலையில் தவிர்க்க முடியாத வேலை நிமித்தமாக இருந்தாலும், மாலை வேலையில் கண்டிப்பாக உங்கள் மகனையோ, மகளையோ பள்ளிக்கூடம் சென்று அழைத்து வாருங்கள்...


மாதம் ஒருமுறையாவது (அது அரசுபள்ளியாகட்டும், தனியார் பள்ளியாகட்டும்)உங்கள் குழந்தைகளின் வகுப்பாசிரியரை நேரில் சந்தித்து பேசுங்கள்....


உங்கள் குழந்தைகளின் நடத்தை மாற்றம் பற்றி கருத்துக்களை கேட்டறியுங்கள்.. ஏனெனில் உங்களை விட , அவர்களிடம்தான் குழந்தைகள் அதிக நேரத்தை கழிக்கிறார்கள்...


இன்னொரு பக்கம் சைக்கோத்தனமான காதல், போதை ஆசாமிகளின் ஹீரோயிச பாதிப்பு, வயதான சில கிழஜென்மங்களின் வக்கிர குரூர முகங்களின் பிடிகளில் வலியச்சென்று வலிமை அனுபவிக்கின்றன சில குழந்தைகள்...


இதெல்லாம் மேலை நாடுகளில் சகஜம் என்போர் வழக்கம் போல எந்த கவலையும் இல்லாமல் உங்கள் பணிகளில் மூழ்கிப்போகலாம்..


குடும்பமானம் ,பிள்ளைகளின் வருங்காலம் , கனவு, லட்சியம்..

எக்ஸட்ரா எக்ஸட்ரா வேணும்னு நினைக்கிறவங்க

பிள்ளைங்க மேல லேசா ஒரு கண்ணு வைங்க..


ஆம்பள பசங்க பொம்பள பசங்கன்ற வேறுபாடெல்லாம் வேண்டாம்..

முக்காவாசி அய்யோக்கியதனம் மொள்ளமாறி வேலை பாக்குறதுக பூராம் இந்த ஆம்பள பொம்பள  பசங்கதான் இருக்குதுங்க நான் பார்த்த வரைக்கும்...


டிக்கெட்டுல , ரூபாய் நோட்டுல நம்பர் எழுதி போடுறது....

ப்ரெண்டோட அண்ணன் அவனோட ப்ரெண்ட்டுன்னு தொடர்கதையா நீளுகிறது இந்த பட்டியல்..


பசங்களும் மலரில் தேனெடுக்கும் வண்டுகளை போல, வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்திட்டு காரியம் முடிஞ்சதும் கழட்டி உட்டுட்டு போயிட்டே இருக்கானுங்க..


அடுத்த இரண்டொரு நாளில் அழுது முடித்து,

அடுத்த காதலுக்கு.. தன்னை புதியதாக தயார் படுத்திட்டு கெளம்பி விடுகிறார்கள் நவீன பட்டாம்பூச்சிகள்..

   

ரோஜாச்செடிகள், வேலிக்குள் இருக்கும் மட்டும்தான் பாதுகாப்பாகவும் அழகாகவும் இருக்க முடியும்...

வேலிதாண்டினால்..., 

அதைப் பிடிங்கி நுகர்ந்து பாத்து கசக்கி எறியும் கரங்களும், முழுச்செடியையும் மேய்ந்து திங்கும் ஆடுகளும் தெருவுக்கு நூறு இருக்கின்றன..


எனவே


*உங்கள் வீட்டு மகள்களை ரோஜாகமகளாக கசங்காமலும் பாதகாறுங்கள்... 


மகன்களை சிங்கமென மிருகமாக வளர்க்காமல் நல்லமனிதனாக  வளர்தெடுங்கள்... !!!


உண்மை கசக்கும்.....

No comments:

Post a Comment